பனைமரம் ஏறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறை பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கணேசன் பனை மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேசனுக்கு அளிக்கப்பட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.