Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மரத்தில் இருந்த சிறுத்தை” அச்சத்தில் உறைந்த பேருந்து ஓட்டுனர்…. வெளியான புகைப்படம்….!!!!

மரத்தில் இருந்த  சிறுத்தையை  பேருந்தில் பயணித்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதனால் வனப்பகுதி அருகில்  அமைந்திருக்கும் கிராமங்களில் வனவிலங்குகள் புகுந்து ஆடு, மாடு போன்றவற்றை  கொன்று வருகிறது. இந்நிலையில்   தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய மழை பாதையான  சிதம்பரம் மலைப்பாதை உள்ளது.

இந்த மலைப்பாதையில் அமைந்துள்ள 17-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கர்நாடகாவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் இருந்த மரத்தில் சிறுத்தை ஒன்று தூங்கிக்கொண்டு  இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து  பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் தங்களது செல்போனில் சிறுத்தையை  படம் பிடித்துள்ளனர். மேலும்  அப்பகுதியில் அடிக்கடி விலங்குகள் நடமாட்டம்  இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |