திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூட பேருந்து சர்வீசுக்காக பழனிக்கு சென்று விட்டு சத்திரப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை துரைராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நல்லதங்காள் ஓடை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லேசான காயங்களுடன் துரைராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்த நேரம் பேருந்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.