Categories
தேசிய செய்திகள்

மரத்தை வெட்டாதீங்க…. நல்ல செய்தி இருக்கு…. அரசின் புதிய முயற்சி…!!

மரங்களை வெட்டாமல் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கும் புதிய திட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது

விவசாயிகள் மரங்களை வெட்டாமல் வளர்த்து வந்தால் அவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்கும் புதிய முயற்சியை கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள மீனங்காடி பஞ்சாயத்து முன்னெடுத்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது நிலத்தில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை வளர்த்தல் மாதவன் என்ற விவசாயிக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பஞ்சாயத்தில் மரங்களின் வங்கி திட்டத்தின் மூலமாக அவருக்கு கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி அவர் தனது நிலத்தில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டவில்லை என்றால் இந்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டாம் என்றும் பஞ்சாயத்து சார்பாக கூறப்பட்டிருந்தது. 2015-ம் வருடம் பாரிசில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் அடிப்படையில்தான் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் தன்னார்வ குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மீனங்காடி பஞ்சாயத்தை தேர்வு செய்து இந்த திட்டத்தை அமல் படுத்தி உள்ளனர்.

மரங்களை வெட்டாமல் வளர்க்க தூண்டும் இந்த திட்டம் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் மரத்தை பேணி காப்பவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. அதோடு விவசாயிகள் மரத்தினால் நன்மையும் பெறுகின்றனர். பரிசோதனை ரீதியாகவே இந்த திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் என்பவர் கூறியுள்ளார்.

Categories

Tech |