Categories
மாநில செய்திகள்

மரம் நட்டால் இலவச மின்சாரம்….. தமிழக அரசும் செயல்படுத்தலாம்…. ராமதாஸ்….!!!!

ஜார்க்கண்டில் வீட்டில் மரக்கன்று நட்டு, அவற்றை பாதுகாப்பவர்களுக்கு ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த 73-வது வனத் திருவிழாவில் பங்கேற்று பேசிய அவர், “நகர்ப்புறங்களை கான்கிரீட்மயம் ஆக்குவதை மனதில் வைத்து, ஒவ்வொரு மரத்தை நடுவதற்கும் பாதுகாப்பதற்கும் 5 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கும். ஆனால், இது செடி வளர்ப்புக்கு பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜார்கண்ட் அரசின் திட்டத்தை ராமதாஸ் வரவேற்றுள்ளார். இந்த திட்டம் சுற்றுசூழலை காத்து, பசுமைபோர்வையை விரிவாக்கும் என்று குறிப்பிட்ட அவர், மரம் நட்டால் இலவச மின்சாரம் என்ற திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ளார். வனத்துறை மூலம் மரம் நடுவதை விட இதன் செலவு குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |