புதிய கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மரத்தை நடுவதை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரும் போது தங்கள் வீட்டில் மரத்தை நட்ட பின்பே அனுமதி என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பசுமையை பிரவ செய்யும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள பல்கலைக்கழகம், பட்டம் பெறும் நேரத்தில் மாணவர்கள் நட்ட மரம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தப் புதிய அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Categories