Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” மரக்கன்று நடும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

மரக்கன்றுகளை நட்ட மாணவர்களை  அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காசாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் வைத்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவி விசாலாட்சி சுந்தரமூர்த்தி, தலைமையாசிரியர் கஜனா தேவி, இயற்கை அலுவலர் ஏ.டி.ஆர். தினேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்கள் வரிசையாக நின்ற படி மரக்கன்றுகளை பெற்று “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” என்று முழக்கமிட்டு பள்ளி வளாகம் முழுவதிலும் மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்ட மாணவர்களை பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |