தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய தாய் தனது மகளுக்கு இறுதிச் சடங்கை நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனை சேர்ந்த விக்கி ஹேண்டர்சன் என்பவர் மகள் எல்லா ஹேண்டர்சன். ஆறு வயதான எல்லா பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சமயம் அவர் மீது திடீரென மரம் ஒன்று விழுந்து விட்டது. இதில் கடுமையாக காயமடைந்த எல்லா ஏர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். எல்லா உயிரிழந்த அன்று அவரது தாய் விக்கி தனது 40வது பிறந்தநாளை தனது அன்பு மகன் கொண்டாட நினைத்திருந்தார்.
ஆனால் மகளுக்கு இறுதிச் சடங்கை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். தனது மகள் நினைவாக ஏர் ஆம்புலன்ஸ் அவளைக் காப்பாற்ற முயன்றதை கருத்தில் கொண்டு அந்நிறுவனத்திற்கு உதவிபுரிய நிதி கேட்டு மக்களிடம் கோரிக்கை வைத்தார். இதனால் ஏராளமானோர் வாரி வழங்கிய நிதி 40,000 பவுண்டுகளுக்கு மேல் சேர்ந்துள்ளது. அதோடு சிறுமியின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.