சென்னையில் மரம் விழுந்த விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பி இருந்ததாக நிதின் சத்யா கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. காற்று பலமாக வீசுகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கமலஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார்பேட்டை அருகில் திடீரென்று பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் நடிகர் நிதின் சத்யா அங்கு இருந்துள்ளார். இந்த விபத்திலிருந்து நூலிலே உயிர் தப்பியதாக அவர் கூறினார் . மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: “மரம் விழுந்த இடத்தில் இருந்து நூலிலேயே உயிர் தப்பினேன். எனவே மழை பெய்யும் போது சென்னையில் மக்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.