Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு…. நொடியில் பறிபோன உயிர்…. பின்னணி என்ன?…. பரபரப்பு…..!!!!

மும்பை கண்டிவலி பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகினனார். அத்துடன் 3 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையிலுள்ள கண்டிவாலி போலீஸ் நிலையப் பகுதியில் நேற்று இரவு 12:15 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், சாலையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மும்பை போலீஸ் டிசிபி தாக்கூர் கூறியிருப்பதாவது “குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மொத்தம் 4 ரவுண்டுகள் சுட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற நபர்களுக்கும் அப்பகுதியில் கொல்லப்பட்ட நபருக்கும் இடையில் இருந்த தனிப்பட்ட தகராறே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என காவல்துறையினர் கூறினர்.

Categories

Tech |