சேலத்தில் மரவள்ளிகிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் உறுதி அளித்துள்ளார்.
மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் தொடர்பான கூட்டத்தில் கூட்டுறவு அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.