Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், பொத்தனூர், பரமத்தி, சோழசிராமணி, பெருங்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன் சந்தை, மின்னாம்பள்ளி, ஆத்தூர் மலை, வேப்பங்குட்டை, புதுச்சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள். இந்த மரவள்ளி கிழங்குகளை பயன்படுத்தி ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

மேலும் சிப்ஸ் தயாரிப்பதற்கு மரவள்ளி கிழங்கு பயன்படுவதால் வியாபாரிகள் அதனை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனை வாங்கும் ஆலை  உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்குகளில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றார்கள். அதாவது கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.8,500 -க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு டன் ரூ.500  வரை அதிகரித்து ரூ.9,000-திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்க பயன்படும் மரவள்ளி கிழங்கு ஒரு டன் கடந்த வாரம் ரூ.9,500-க்கு விற்பனையாகி வந்த நிலையில் இந்த வாரம் ரூ.10,000 -க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |