Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தின் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் இவ்வளவு பேரா?…!!!

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 20,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 20,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,83,862 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 312 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,276 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் இன்று மட்டும் 10,801 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,36,574 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Categories

Tech |