மராட்டிய மாநிலத்தில் உள்ள அம்போலி என்ற பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நத்தை ஒன்றை சத்குரு கடாஜ் மஹராஜ் கல்லூரியில் விலங்கியல் துறையினர் கண்டுள்ளனர். அன்றிலிருந்து இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாட்டின் விஞ்ஞானிகளுடன் இணைந்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர். அந்த ஆய்வில் பிற நத்தை வகைகளை விட பல விதத்தில் இந்த வகை வேறுபட்டு உள்ளது என தெரியவந்துள்ளது. இதனை அனைவரும் வியப்புடன் கண்டனர். இதற்கு “வராடியா”என்று பெயரிட்டுள்ளனர். அந்த நத்தையின் படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Categories