Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க… ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 4000 கோடி கடன் வாங்க முடிவு…!!!!!

மராட்டியத்தில் 12 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து மராட்டிய மாநில அரசு 400 கோடி ரூபாய் கடனாக பெற இருக்கின்றது. மராட்டியத்தில் ஜல் கான், சதாரா, அலிபா, சிந்துதூர், உஸ்மானா பாத், பர்பானி, அமராவதி, ரத்தினகிரி, கட்சி ரோலி, பட்டாயா மற்றும் அமர்நாத் போன்ற பன்னிரண்டு மாவட்டங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லாத சூழல் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மருத்துவ கல்வி துறையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் ஆசிய  வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூபாய் 4000 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புக்கொண்டிருப்பதாக மருத்துவ கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை மந்திரி கிரிஷ் மகாஜன் கூறியுள்ளார். நிதியை பெருக்குவதற்கான தொழில் நுட்ப முறைகளை மாநில அரசு விரைவில் முடிக்கும் மேலும் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இந்த திட்டங்கள் அனைத்தையும் முடிக்க இலக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |