மராட்டிய மாநிலத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய மந்திரி நாராயண் ரானே “மராட்டிய மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதத்தில் பாஜக ஆட்சி நடைபெறும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல கட்சிகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கருத்து பற்றி பாஜக தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் நாராயணன் கூறியது, நாராயண் ரானே கருத்து உண்மையாகும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த கருத்துக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் மகா விகாஸ் கூட்டணி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று, பாஜக தொடர்ந்து மிகப்பெரிய கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் அது உண்மையாக போவதில்லை என்று தெரிவித்துள்ளது.