Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தை வேட்டையாடும் கொரோனா… ஒரே நாளில் 422 பேர் பலி…!!!

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 422 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நாட்டிலேயே மராட்டியத்தில் மட்டும் தான் அதிக அளவு கொரோனா பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மராட்டிய மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 422 பேர் பலியாகியுள்ளனர். அதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,687 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 11,119 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,15,477 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 9,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்கள் இன் மொத்த எண்ணிக்கை 4,37,870 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,56,608 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அம்மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.

Categories

Tech |