பலேவாடி ஸ்டேடியத்தில் நேற்று மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய நாட்டின் ஜான் பேட்ரிக் ஸ்மித் மற்றும் லூக் சாவில்லே ஆகியோரை எதிர்த்து விளையாடினர். மேலும் ஒரு மணி நேரம் மற்றும் 45 நிமிடங்கள் இந்த இறுதிப்போட்டி நீடித்தது.
அதில் இந்திய வீரர்கள் 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். இதன் மூலம் 21-வது சர்வதேச டென்னிஸ் பட்டத்தை போபண்ணா வென்றார். இதற்கு முன்னதாக அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் போபண்ணா பட்டம் வென்ற நிலையில் தற்போது இரண்டாவது பட்டத்தையும் போபண்ணா கைப்பற்றியுள்ளார்.