நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத்தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது.
அதன்படி, மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மராட்டியத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.