Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பேருந்து கட்டண உயர்வு… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 95 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர் இந்த பஸ்கள் மும்பையிலிருந்து புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென்று அனைத்து வகை பஸ்களின் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளதாவது: “ஊரடங்கு காரணமாக போக்குவரத்து கழகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே கட்டணம் உயர்த்துவதால் கூடுதலாக 50 கோடி வரை வருவாய் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு மாநில போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |