மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 20க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் இந்த வார்டில் திடீரென தீப்பற்றியது. இந்த திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இறந்து போன அனைவரும் 63 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.மேலும் தீயை விட அதனால் ஏற்பட்ட பேரும் புகையின் காரணமாக 11 பெரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விரிவான விசாரணை நடத்தக் கோரிய மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். மேலும் இது குறித்து பேசிய பிரதமர் மோடி மராட்டியத்தில் ஏற்பட்ட தீ விபத்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மேலும் காங்கிரஸ் தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.