Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாா்ச்-7ம் தேதி அயோத்தி பயணம்

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே,வருகிற  மாா்ச்-7ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில், “ மார்ச் மாதம் 7-ம் தேதி மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று ஸ்ரீ ராமரை வழிபடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்கூறினார்.

மாா்ச் 7-ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று  100 நாள்கள் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அன்று ராமர் கோவில் வழிபாடு செய்யும் உத்தவ்தாக்கரே, மாலையில் சரயு நதிகரையில் நடைபெறும் ஆரத்தி விழாவிலும் கலந்து கொள்கிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளி கிழமை டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி , உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர்  28-ல் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்றபின், அயோத்திக்கு ராமர் கோவிலுக்கு அவா் செல்ல இருக்கும் முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |