பார்வையாளர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசிய கிளிகள் தனி இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் கிளிகள் இருப்பிடத்திற்கு எரிக், எலிசி, டைசன், பில்லி, ஜெடே என்ற ஆப்பிரிக்க கிளிகள் 5 புதிதாக வந்தன. சில தினங்களிலேயே இந்த கிளிகள் பார்வையாளர்களை மரியாதைக் குறைவாக பேசுவதாகவும் கிண்டல் செய்தும் நடந்து கொண்டதாகவும் பூங்கா நிர்வாகத்திற்கு புகார்கள் வரத் தொடங்கின. ஒரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்க மற்றொரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்கிறது.
ஒரு கிளி பார்வையாளர்கள் மனது புண்படும்படி பேசுவதாகவும் நடந்து கொள்வதாகவும் பலர் புகார் அளித்துள்ளனர். இதனால் நிர்வாகத்தினர் அந்தக் கிளிகளை வேறு தனி இடத்திற்கு மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மிகவும் திறமையானவை என்றும் குறிப்பாக அனைத்துவிதமான சத்தங்களையும் அவை குறள்களாக கற்றுக் கொள்ளும் என்றும் பூங்கா நிர்வாகத்தின் நிர்வாக அதிகாரி ஸ்டீவ் என்பவர் கூறியுள்ளார்.