நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் பாமகவின் செயல்பாடுகள், கூட்டணி குறித்த நிலைப்பாடு ஆகியவற்றிற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவு நமக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. நாம் பலமான கட்சியாக இருந்தாலும் நம்முடைய பலம் எல்லாம் எங்கே போய்விட்டது. எனது 40 வருட கால உழைப்புக்கு தற்போது மரியாதை கிடைக்காமல் போய் விட்டதே என்று கவலை தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், யாரும் ஆதாயத்துக்காக கட்சியில் இருக்க வேண்டாம். கட்சியில் போட்டி, பொறாமை இருக்கக்கூடாது என்று கூறிய அவர், அதிமுக- திமுகவுக்கு பல நேரங்களில் நாம் உதவி இருக்கிறோம். அதில் ஒரு கட்சி நம்மை கலங்கப்படுத்தியது. இன்னொரு கட்சி நம்மை கொஞ்சம் கௌரவப்படுத்தியது. இனி நம்முடைய தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும். வேறு யாருடனும் கூட்டணி கிடையாது என்று கூறினார். மேலும் என்னுடைய மூச்சு உள்ளபோதே அன்புமணி ராமதாஸ் கோட்டையில் உட்கார வேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.