உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவவீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சி செய்தபோதும் அவை தோல்வியில் முடிந்தது. இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதனால் உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் போர் தொடங்கியது முதல் உக்ரைன் மீது 2 ஆயிரத்து 100 ஏவுகணைகளை ரஷ்யா ஏவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் வைஸ்கார்ட் எனும் அமைப்பு சேரித்துள்ள தகவல்களின்படி உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் 600 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பெலாரசிலிருந்து உக்ரைன் மீது ஏவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய படையினரின் ஏவுகணைகள் குண்டுவீசி அழித்து வருகிறது. இந்த நிலையில் மரியுபோல் நகர மேயரின் உதவியாளர் பெட்ரோ ஆண்டிரியுசெங்கோ கூறியதாவது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 5 வானளாவிய கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தது.
இதில் 2 கட்டிடங்களில் நடைபெற்ற தேடுதல் பணியில் 50 -100 உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தாக்குதலில் மரணங்கள் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார். அதன்பின் இதேபோல் லுகான்ஸ்க் நகர கவர்னர் கூறியதாவது, சிவிரோடொனெட்ஸ்க் பகுதியை ரஷ்ய படைகள் பெரியளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என கூறியுள்ளார். இதனிடையில் தொன்பாஸ் நகரின் விதியானது முடிவுசெய்யப்பட்டு கொண்டிருக்கிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.