மருதநாயகம் திரைப்படத்திற்கு ஹீரோவை மாற்றிய கமல்.
உலகநாயகன் கமல்ஹாசனின் நீண்ட நாள் ஆசையான மருதநாயகம் திரைப்படத்தின் பட்ஜெட்டை சோனி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுகுறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மருதநாயகம் என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவரின் இயற்பெயர் முகமது யூசப் கான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்ட மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட படம் மருதநாயகம். கடந்த 1994-ஆம் ஆண்டு மருதநாயகம் திரைப்படத்தின் ஆரம்பப் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் தொடக்க விழாவின்போது இங்கிலாந்து ராணி எலிசபெத் பங்கேற்றார். இந்நிகழ்வு உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. இத்திரைப்படத்திற்கு ஆயிரம் குதிரைகள், யானைகள், போர் வீரர்கள், அவர்களின் உடைகள் என செலவுகள் ஏராளமாக இருந்தது. தற்போது இருப்பது போல் கிராபிக்ஸ் அந்த காலகட்டத்தில் இல்லாததால் பட பட்ஜெட் அதிகமாக இருந்தது. கமல்ஹாசன் இத்திரைப்படம் பணப்பற்றாக்குறையால் மட்டும் நிற்கவில்லை, உலக வினியோக நெட் தேவை காரணமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இத்திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம் பிரென்ச் உள்ளிட்ட மொழிகளிலும் உள்ளன என கூறினார் கமல்ஹாசன். இப்படி பல காரணங்களால் மருதநாயகம் படம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் கூடிய விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன் விடாமுயற்சியுடன் இருக்கிறார். அண்மையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கமல்ஹாசன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அது என்னவென்றால் 1997-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்குவதற்காக சோனி நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்பொழுது கமலுக்கு வயதாகிவிட்டதால் பழைய மாதிரி திரைப்படத்தில் கடின உழைப்பைக் கொண்டு நடக்க முடியாத காரணத்தினால் கமல் இயக்கி வேறு ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார். இதுபற்றி ஆலோசனையில் இருக்கின்றார் கமல். அந்த கதாபாத்திரத்திற்கு ஆரியா நன்றாக இருப்பார் எனவும் அந்த கதாபாத்திரத்தில் கட்டுக்கோப்பான உடலுக்கு ஆர்யா பொருத்தமாக இருப்பார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.