மருதனப்பள்ளி ஊராட்சியில் ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம் மருதனப்பள்ளி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் தொடங்கப்படுகிறது. இந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுபிரியா, விமல்ரவிக்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை ஆரம்பித்து வைத்தார்கள்.
அதில் மாவட்ட கவுன்சிலர் மம்தா மஞ்சுநாத், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், மருதனபள்ளி ஊராட்சி தலைவர் துணைத் தலைவர் சீனிவாசன் நிர்வாகிகள் புவுல்ராஜ், கேசவ ரெட்டி, ஒப்பந்ததாரர் பாபு, ஊராட்சி செயலாளர் நாகேந்திரன், வார்டு உறுப்பினர் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.