தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. எஸ்பிபி அவர்கள் பாடிய பாடல், டூயட் பாடல் என ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியானது.
அதோடு படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது இதனை ரஜினி ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.