சிவகங்கை மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
மருதுசகோதரர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி தவிர்த்து 6 தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.