இன்று (24/10/2022) மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று மருதுபாண்டியர்களின் சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவற்றில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்றோர் மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.