நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் ஆகஸ்ட்-16 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்கப்பப்பட்டது. இந்நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு செவிலியர் மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மருத்துவ கல்லூரி டீன் வள்ளி தகவல் தெரிவித்துள்ளார்.