தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி வரை கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி வரை கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.