Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையா…? பாரதிராஜாவின் மகன் விளக்கம்….!!!!

மருத்துவச் செலவுக்கு எங்களிடம் பணம் இல்லை எனக் கூறுவது அபத்தமானது என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிப்பதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுபோன்ற தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம் என்றும் எங்களுடைய சொந்த பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா தற்போது உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகி விட்டார் என்றும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் அவருடைய மருத்துவச் செலவை முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் செய்துள்ளது. மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக உள்ளார் என்று மனோஜ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |