Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவத்தில் டாக்டர் பட்டம்…. பிரபல இயக்குனரின் மகள்….!!!!

மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி. இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள் 1 மகனும் உள்ளனர். சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது. 2-வது மகள் அதிதி சங்கர் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார்.

படிப்பை முடித்தவுடன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் நடிகை அதிதி சங்கர் மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் தற்போது பெற்றிருக்கிறார்.

இதையடுத்து அதிதி சங்கர் படித்த கல்லூரியான ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பட்டம் பெறும் புகைப்படத்தையும், மகள் பட்டம் பெறுவதை பார்ப்பதற்கு ஆனந்தத்துடன் சென்ற சங்கர் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |