Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம்…. சற்றுமுன் அதிரடி….!!!

தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் உள்துறை செயலாளராக இருந்த எஸ் கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறை ஆணையராக எல்.நிர்மல்குமாரும், வணிகவரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம். கூட்டுறவுத்துறை செயலாளராக உள்ள முகமது நசீமுதீன், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராக மாற்றம். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக தாரேஷ் அகமது நியமனம்.

Categories

Tech |