மருத்துவப்படிப்பில் OBC பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு மட்டும் தற்போது தனிப்பட்ட முறையில் இட ஒதுக்கீடு வழங்கினால் அது மற்ற மாநிலங்களில் சட்ட சிக்கல்களை உருவாக்கும் என மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு குறித்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நாளை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. எனவே வரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படுமா இல்லை அடுத்த ஆண்டு அமல்படுத்தபடுமா என்பது குறித்து தெரியவரும்.