மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் ஜனவரி 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எவ்வளவு என்பது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் வழிகாட்டுதல் வெளியிடும் பொழுது அதில் தெரிவிக்கப்படும். அந்த வகையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர ஒரு ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ.13 ஆயிரத்து 610, பி.டி.எஸ். இடங்களுக்கு ரூ.11 ஆயிரத்து 610 ஆகும்.
இதில் கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கு மட்டும் கல்வி கட்டணம் ஒரு லட்சம். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கு கல்வி கட்டணம் 3 லட்சத்து 85 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரையிலும், பி.டி.எஸ். இடங்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் கலந்தாய்வில் கலந்துகொண்டு இடங்களை தேர்வு செய்து குறித்த காலத்திற்குள் கல்லூரியில் சேர வில்லை என்றால் அபராத கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் சேர்ந்து இடையில் நின்றால் இடைநின்ற கட்டணமாக ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டவேண்டும். அது எந்த காலகட்டத்தில் என்பதனை பொருத்து அபராத கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்படும்.