Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவப் படிப்பிற்கான உள் இடஒதுக்கீட- ஆளுநரை கண்டித்து த.பெ.தி.க.வினர் போராட்டம்

மருத்துவ உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசாரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மருத்துவ படிப்பில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித்தை  கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |