தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு குறைந்து வந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்து தட்டுப்பாட்டு குறித்து பேசிய அவர் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். இந்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.