Categories
மாநில செய்திகள்

“மருத்துவமனைகள் கவனத்திற்கு”…. எல்லாம் ரெடியா இருக்கணும்…. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

 அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வி இயக்குநர் தரப்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சீனா, ஜப்பான், தென்கொரியா, உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நமது தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் கையிருப்பில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் உடனடியாக மருத்துவப் பணிகள் கழகத்திடம் தெரிவித்துவிட்டு அவற்றை கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்நிலையில் உயிர்காக்கும் முக்கிய உபகரணங்கள் பழுதின்றி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவம் படிக்கும் மாணவர்கள், செவிலியர்கள் என அனைவரும் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றி தடுப்பூசிகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் வசதி அதிகரிக்க வேண்டும். மேலும்
தொற்று  உள்ளவர்களுக்கு சிகிச்சை, தடுப்பூசி, தடுப்பு விதிகளை கடைப்பிடித்தல் என்ற 5 நிலை அம்சங்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது பாதிப்பு மிக குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவுறுத்துதலின்படி சளி மாத்திரைகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் சளி மாதிரிகளை அரசின் மரபணு பகுத்தாய்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |