Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போக்சோவில் மாணவர் கைது…!!

மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும், 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரது தாய் மகளை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |