மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டடிபாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் ராஜேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர்கள் ஈரோடு-சத்தி ரோட்டில் இருக்கும் சாந்தி தியேட்டர் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த வேன் சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகம் மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பிரதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர்.