Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி அருகே ஆசாரங்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மண்ணாங்கட்டி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மண்ணாங்கட்டிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மண்ணாங்கட்டியை அவரது மருமகன் பகவத்சலம் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வரும் வழியில் திடீரென மண்ணாங்கட்டி இருசக்கர வாகனத்தில் இருந்து  நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த மண்ணாங்கட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மண்ணாங்கட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |