அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னபாப்பா(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனைக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பேருந்து மூதாட்டி மீது மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.