கரூர் மாவட்டத்தில் உள்ள முதலிகவுண்டனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி தேவி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண், 1 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக காயத்ரி தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.
இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறகும் காயத்ரி தேவி வராததால் கார்த்திக் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கார்த்திக் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.