கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொங்கலப்பம்பாளையத்தில் விவசாயியான கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட ராஜகோபால் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது கடந்த 20 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் ராஜகோபாலின் இடது காலில் சைலன்சர் பட்டு படுகாயம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு ராஜகோபால் வெளியே புறப்பட்டார்.
இதனையடுத்து திரும்பி வந்தபோது தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்து வாயில் நுரை தள்ளிய படி மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராஜகோபாலை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.