Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மருத்துவமனைக்கு போகலாம்” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சமையல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் சமையல் தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் காயமடைந்த கண்ணனை அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் கண்ணன் மருத்துவமனைக்கு வர மறுத்ததால் கோபத்தில் அவரது மனைவி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற கண்ணன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கணவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |