Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் அனுமதி…. ஆள் அடையாளமே மாறி போன பிரபலம்…!!!

இந்திய முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் (89), உடல்நல குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 2019ஆம் ஆண்டு அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் முதல் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்து வந்ததாகவும், திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் சிகிச்சை எடுத்து வரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் உடல் நலம் குன்றிய அவர் ஆள் அடையாளமே மாறிப் போய் உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பல தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |