நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் அரிவால், ரப்பர் பைப், கட்டையால் மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள், படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன் மற்றும் மீன்களை பறித்து விட்டு விரட்டி அடித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புஷ்பவனம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக மீனவர்கள் கடல் கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
Categories