Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி… தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

தமிழ்நாட்டில் முதன் முறையாக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இதுவரை தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லாமல் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களுக்கு கொடுக்கும் அளவிற்கும் நம்மிடம் ஆக்ஸிஜன் உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது. சென்னை அண்ணாநகர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மையத்தின் மூலம் ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மருத்துவமனையின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |